Monday, June 25, 2012

சகுனிக்கு ஷாக் கொடுத்த சம்பளம்!





 இன்று உலகம் முழுவதும் வெளியாகும் சகுனி படத்தை கடந்த மே மாதமே கோடை வெளீயிடாக ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிட்டார்கள்.
ஆனால் அதற்கு சாத்தியமில்லாமல் செய்து விட்டார்களாம். முதலில் அதில் வில்லனாக நடித்தார் சலீம்கௌஸ். சகுனி படப்பிடிப்பு முடிந்த்து மொத்தப்படத்தையும் முடித்துப் பார்த்தபோது சலீம் நடிப்பில் அப்பயொன்றும் சத்து இல்லை என்று சொல்லி, அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவர் நடித்த  பொலிட்டிகல் புரோக்கர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்!
தெலுங்கில் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் என்பதால், பிரகாஷூம் மறுபேச்சு பேசாமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். ஏற்கனவே கார்த்தியின் பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோவுக்கு பிரகாஷ்ராஜ் பணம் தர வேண்டியிருந்ததால் அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்து முடித்திருக்கிறார். பிறகு டப்பிங் பேச அழைத்தபோது பிரகாஷ்ராஜுக்கு ஒரு நாளைகு இரண்டு லட்சம் சம்பளம் வீதம் 20 நாட்களுக்கு 40 லட்சம் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருகிறார்கள்.

ஆனால் தற்போது பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டெட் வில்லன் ஆகியிருக்கும் பிரகாஷ்ராஜ், ரவுடி ரத்தோர் படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருகிறார். தமிழுக்கு 1 கோடிக்கு குறைந்து நடிக்கமுடியாது என்று சொன்னவர் க்ரீன் ஸ்டூடியோ 70 லட்சம் செட்டில் செய்த பிறகே டப்பிங் பேசிக்கொடுத்தாராம்! நேற்று பொறந்த ஹீரோ எல்லாம் ஐந்துகோடி பத்து கோடி என்று சம்பளம் வாங்கும்போது பெரிய ரசிகப்பட்டாளத்தைக் வைத்திருக்கும் நான்  ஒரு படத்துக்கு ஒரு கோடி கேட்கக் கூடாதா என்று அதிரடியாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ்!
சகுனியில் இன்று எக்ஸ்போஸ் ஆக இருக்கும் இன்னொரு உள்குத்து அனுஷ்கா!  தற்போது கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் ஹீரோயினாக நடித்துவரும் அனுஷ்காவின் காலை கைப் பிடித்து, சகுனியில் ஐந்து காட்சிகளில் வந்துபோகும் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸாக இருக்கட்டும் என்று இதை மீடியா மோப்பம் பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருகிறார்கள்!

Labels:

சகுனி - சினிமா விமர்சனம்

Saguni Film Review Saguni Film Review

 நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்
இசை: ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
இயக்கம்: சங்கர் தயாள்
அரசியலை மையமாக வைத்து சடையர் வந்து நாட்களாகிவிட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!
கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியதுதான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!
முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.
தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.
முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!
முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.
என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"
பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும்போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ 1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!
மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!
கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை.
இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!
ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம்.
கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்!

Labels:

Thursday, June 21, 2012

ஒருகல் ஒரு கண்ணாடி – திரை விமர்சனம்


நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து – இயக்கம்: ராஜேஷ் எம்
தயாரிப்பு – ரெட் ஜெயன்ட்
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.
அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று ‘பாஸ்ட் பார்வர்டு’ கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!
இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.
குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.
ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!
மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!
முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.
உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.
ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள்.
ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.
குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான்…
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.
வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.
ஒருமுறை என்ன… ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!

Labels: